கிறிஸ்துவின் சுகந்த வாசன
கிறிஸ்துவின் சுகந்த வாசனை
The Fragrance of Christ
📖 எபேசியர் 5:2
"கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்."
1. சுகந்த வாசனையான அர்ப்பணிப்பு
A Fragrant Commitment
- 📖 எபேசியர் 5:2
- உண்மையான அர்ப்பணிப்பு என்பது தேவனுக்கு ஏதாவது கொடுப்பது அல்ல; நம்மையே அவரிடம் ஒப்படைப்பதாகும்.
- 📖 எபிரெயர் 10:7 – "தேவனே, உம்முடைய சித்தத்தின்படி செய்ய, இதோ, வருகிறேன்."
- 📖 1 சாமுவேல் 15:22 – பலிகளைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலே சிறந்தது.
- கீழ்ப்படிதலே தேவனுக்குச் சுகந்த வாசனையான அர்ப்பணிப்பு.
- Example: ஆபிரகாம் (ஆதியாகமம் 22)
- Example: மரியாள் (யோவான் 12:1-8)
- Example: நோவா (ஆதியாகமம் 8:20-21)
- Example: இயேசுவின் பரிபூரண அர்ப்பணிப்பு (பிலிப்பியர் 2:8)
- Cross References: எபிரெயர் 9:14, எபிரெயர் 10:10-14, ரோமர் 12:1
2. சுகந்த வாசனையான அன்பு
A Fragrant Love
- 📖 எபேசியர் 5:2
- கிறிஸ்துவின் அன்பு வார்த்தைகளில் அல்ல; தியாகத்தில் வெளிப்பட்டது.
- 📖 ரோமர் 12:9 – உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக.
- 📖 1 பேதுரு 1:22 – சுத்த இருதயத்தோடே ஒருவரிலொருவர் ஊக்கமாய் அன்புகூருங்கள்.
- 📖 1 தெசலோனிக்கேயர் 4:10 – அன்பிலே இன்னும் அதிகமாய்ப் பெருகுங்கள்.
- 📖 1 யோவான் 2:5 – அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு பூரணமாயிருக்கும்.
- Example: நல்ல சமாரியன் (லூக்கா 10:25-37)
- Example: இயேசு சீஷர்களின் கால்களைக் கழுவினார் (யோவான் 13:1-15)
- Example: சிலுவையின் அன்பு (ரோமர் 5:8)
- Example: பிலிப்பி சபையின் அன்பு (பிலிப்பியர் 4:18)
- Cross References: 1 கொரிந்தியர் 13:1-3, யோவான் 3:16, பிலிப்பியர் 4:18

Comments
Post a Comment