❤️ தேவ பக்தியுள்ளவன் ❤️ Devoted to God ❤️ परमेश्वर के प्रति समर्पित ❤️
தேவ பக்தியுள்ளவன்
"என் ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்." - சங்கீதம் 86:2
1. தேவ பயமுள்ளவன்
அப்போஸ்தலர் 10:2
அவன் தேவபக்தியுள்ளவனும் தன் வீட்டாரனைவரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாயிருந்து, ஜனங்களுக்கு மிகுந்த தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.
கர்த்தருக்கு பயப்படுதல் என்றால் என்ன?
நீதிமொழிகள் 1:7
கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
நீதிமொழிகள் 8:13
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
கர்த்தருக்கு பயன்படுவதால் உண்டாகும் நன்மை
நீதிமொழிகள் 19:23
கர்த்தருக்குப் பயப்படுதல் ஜீவனுக்கேதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
சங்கீதம் 34:9
கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை.
2. சித்தமானதை செய்கிறவன்
யோவான் 9:31
பாவிகளுக்கு தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம்; ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.
உதாரணம்: கொர்னேலியு
கொர்னேலியு தனது தாராள மனதுக்கும் நிரந்தர ஜெபங்களுக்கும் பெயர் பெற்றவர். கொடுப்பதை விட, அவர் எப்போதும் தேவனைத் தேடும் ஜெபமுள்ள மனிதர்.
கொலோசையர் 4:2
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.
3. சத்தியத்தை அறிந்தவன்
தீத்து 1:1-3
தேவபக்திக்கேதுவான சத்தியத்தை அறிகிற அறிவும் விசுவாசமும் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களுக்கு உண்டாகும்படி.
யோவான் 8:32
சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.
வார்த்தை பக்திக்கு வழிவகுக்கிறது
சத்தியத்தை அறியும் முன், நாம் தவறாக வழிநடத்தப்பட்டோம், ஆனால் சத்தியத்தை அறிந்த பிறகு, வேண்டுமென்றே பாவம் செய்வதன் தீவிரத்தை நாம் புரிந்துகொள்கிறோம்.
1 யோவான் 5:20
அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்து என்னப்பட்ட சத்தியமுள்ளவருக்குள்ளும் இருக்கிறோம்; இவரே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாயிருக்கிறார்.
4. தேவ பக்தியை வெளிப்படுத்துபவன்
யோனா 1:9
நான் எபிரெயன்; சமுத்திரத்தையும் பூமியையும் உண்டாக்கின பரலோகத்தின் தேவனாகிய கர்த்தர் இடத்தில் பயபக்தியுள்ளவன்.
உதாரணம்: யோனா
அவசரநிலையில், யோனா தனது உண்மையான அடையாளத்தை நினைவுகூர்ந்தார். எல்லாவற்றையும் படைத்த உண்மையான கடவுளாக யெகோவாவை அவர் ஒப்புக்கொண்டார்.
சங்கீதம் 5:7
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்துக்குள் பிரவேசித்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
2 பேதுரு 3:11
இப்படி இவைகளெல்லாம் அழிந்துபோகிறதாயிருக்கிறபடியால் நீங்கள் எப்படிப்பட்ட பரிசுத்த நடக்கையும் தேவபக்தியும் உள்ளவர்களாயிருக்கவேண்டும்!
5. மற்றவர்களுக்கு இடறலில்லாதவன்
ரோமர் 16:17
நீங்கள் கற்றுக்கொண்ட உபதேசத்திற்கு விரோதமாய்ப் பிரிவினைகளையும் இடறல்களையும் உண்டாக்குகிறவர்களைக்குறித்து எச்சரிக்கையாயிருந்து, அவர்களை விட்டு விலகவேண்டும்.
லூக்கா 17:2
அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்.
சங்கீதம் 119:165
உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.
6. துன்பப்படுபவன்
2 தீமோத்தேயு 3:12
கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்.
மத்தேயு 5:10-12
நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்; சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்.
ரோமர் 12:14
உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.
2 கொரிந்தியர் 4:9
துன்பப்படுத்தப்பட்டும் கைவிடப்படுகிறதில்லை; கீழே தள்ளப்பட்டும் மடிந்துபோகிறதில்லை.

Comments
Post a Comment